ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் உக்ரைன்!

0
188

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் பீரங்கிகள் அணிவகுத்து செல்கின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் நோக்கி உக்ரைன் பீரங்கிகள் அணிவகுத்து செல்கின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.