கனடாவில் ரஷ்ய விமானத்திற்கு பெருந்தொகை பார்க்கிங் கட்டணம் விதிப்பு!

0
488

ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப்பெரிய விமானத்திற்கு பெருந்தொகை பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்று பிப்ரவரி 27ம் திகதியில் இருந்தே ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் உள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் கனேடிய அரசாங்கம் ரஷ்ய விமான சேவைகளுக்கு அனுமதி மறுத்துள்ளதுடன், மறு உத்தரவு வெளியாகும் வரையில் கனடாவில் இருந்து வெளியேறவும் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த ரஷ்ய சரக்கு விமானத்திற்கு நிமிடத்திற்கு 74cents பார்க்கிங் கட்டணம் விதித்துள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்கு 1,065.60 டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தற்போது 88 நாட்கள் கடந்துள்ள நிலையில், குறித்த சரக்கு விமான நிறுவனமானது சுமார் 93,000 டொலர் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் தொடர்புடைய விமானமானது சீனாவில் இருந்து ரொறன்ரோ வழியாக ரஷ்யா செல்ல திட்டமிட்டு ரொறன்ரோவில் தரையிறங்கியது. ஆனால், கனேடிய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விமான சேவை ரத்தானது குறிப்பிடத்தக்கது.