கோமாளிகள் தினத்தை கோலாகலமாக கொண்டாடிய பெரு நாடு!

0
714

பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் நீண்ட காலணிகள், வண்ணம் பூசிய முகங்கள், விக்குகள் அணிந்து பேரணி நடத்தினர்.

குழந்தைகளுடன் பேரணியைக் காணத் திரண்ட உள்ளூர் மக்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பி கோமாளிகளை வரவேற்றனர்.

மக்களை சிரிக்க வைப்பதுதான் தங்கள் கலை என்று கூறும் இந்த கோமாளிகள் பணிச்சுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அழுத்தங்களை நீக்குவதாகக் கூறுகின்றனர்.

மேலும் ஏழைகளின் கோமாளி என்று அழைக்கப்பட்ட பிரபல கலைஞர் டோனி பெரேஜில் ( Toni Perejil )நினைவாக 1987 முதல் ஆண்டுதோறும் கோமாளிகள் தினத்தை பெரு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Clowns to the left of me: This is the scariest parade in the world – Orange  County Register

Peru's annual Clown Day parade - in pictures - BBC News

Peru's annual Clown Day parade - in pictures - BBC News

Peru's annual Clown Day parade - in pictures - BBC News