போராட்டக்காரர்களுக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு!

0
595

கோட்டா கோ கமவில் உள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

Sri Lanka PM appeals for 'patience' from protesters amid crisis | Protests  News | Al Jazeera

அதன்படி, pmoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள மற்றும் நடைமுறை திட்டங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் அல்லது குழுக்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை பிரதமர் அலுவலகம் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.