மீண்டும் பதவியேற்கும் எண்ணம் இல்லை! அதிரடி அறிவிப்பை விடுத்த தமிழர்!

0
159

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்திரஜித் குமாரசுவாமி, இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்தார். அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அந்தப் பதவியை மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் திறமையான நபராவார். எனவே, இந்த நேரத்தில் அவருக்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவது ஒரு தொழில்முறை மற்றும் குடிமகன் என்ற வகையில் தனது கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது அந்த கடமைகளை நானும் செய்து வருகிறேன் எனவும் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஊடகங்களிடம் தெரிவித்தார்.