அவன் ஒன்றும் வன்முறையாளர் அல்ல: 21 மாணவர்களைக் கொன்ற இளைஞனின் தாய்

0
383

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் இருவரை சுட்டுக்கொன்ற இளைஞர் வன்முறையாளர் அல்ல என அவரது தாயார் வாதிட்டுள்ளார்.

நடந்த சம்பவங்கள் தமக்கு வியப்பை தருவதாகவும் அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார். செவ்வாயன்று டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர் 18 வயதான சால்வடார் ராமோஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், ராமோஸின் தாயார் அட்ரியானா ரெய்ஸ் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்காகவும், அந்த அப்பாவி குழந்தைகள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்றார்.

தமது மகன் தனிமை விரும்பி என குறிப்பிட்டுள்ள ரெய்ஸ், அவனுக்கு தவறான நண்பர்களும் இல்லை என்பதுடன், தமது மகனிடம் ஒருபோதும் வெறுப்பை காட்டியதில்லை என்றார்.

ராமோஸ் போதை மருந்து பழக்கம் கொண்டவர் அல்ல எனவும் ரெய்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாட்டியான செலியா கோன்சாலஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பாடசாலை நோக்கி ராமோஸ் விரைந்ததாக கூறப்படுகிறது.

இதில் கோன்சால்ஸ் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மட்டுமின்றி தாக்குதல் முன்னெடுக்கும் முன்பு பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் ராமோஸ் பதிவிட்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.