இலங்கைமீது கொண்ட கரிசனையால் பிரிட்டன் எடுத்த நடவடிக்கை

0
368

 இலங்கை குறித்து கடன் வழங்கும் முக்கிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிஸ்கிளப் உடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வெளிநாடு பொதுநலவாயம் நாடாளுமன்ற விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் (vicky ford) தெரிவித்துள்ளார். அத்துடன் உணவுப்பாதுகாப்பு வாழ்வாதாரம் உட்பட இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அமைதியான ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் உலக வங்கி 600மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிகின்றோம் எனவும் அவர் கூறினார்.

அதேசமயம் உலகவங்கிக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு பிரிட்டன் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் நிதி நிலைமை குறித்து பிரிட்டன் சர்வதேச நிதி அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை பேண்தகுநிலைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் ஆழமானபேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் நீடிக்கலாம், இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளது. அதேசமயம் இலங்கையின் யோசனைகள் எவையும் இதுவரை உறுப்புநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட்டவுடன் நாங்கள் அவற்றை ஆராய்வோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான நிதி உதவி குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதாகவும், இலங்கையின் கடன் குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளி;ல ஈடுபட்டுள்ளதாகவும் பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் (vicky ford) தெரிவித்தார்.