அமெரிக்காவில் 5 மாதத்தில் 212 படுகொலைகள்!

0
171

அமெரிக்காவில் இந்த 5 மாதங்களில் மட்டும் 212 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் பாடசாலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 10 நாட்களுக்கு முன்னர் தான் நியூயார்க் நகரின் பஃபேலோ பகுதியில் நடந்த பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே மே மாதம் வரையில் அமெரிக்கவை உலுக்கிய பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இலாப நோக்கற்ற ஆராய்ச்சி குழு ஒன்று அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சம்பவங்களையும் அவற்றின் பண்புகளையும் பட்டியலிட்டுள்ளது.

2022ம் ஆண்டு தொடங்கி மே மாதம் வரையில் நாடு முழுவதும் 212 பாரிய துப்பாக்கிச் சூடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாரிய துப்பாக்கிச் சூடு என கூறப்படுவது, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தவிர்த்து நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சுடப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை நடந்த 212 பாரிய துப்பாக்கிச் சூட்டில் 27 எண்ணிக்கை பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெக்சாஸ் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு தம்மை வெகுவாக பாதித்துள்ளதாகவும், சோர்வடைய வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சால்வடார் ராமோஸ், பயன்படுத்திய துப்பாக்கியானது சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டதும், தமது 18வது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.