எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம் – ராகுல் காந்தி

0
497

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஸ்ருதி கபிலாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார்.

அப்போது, 1991-ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பேரணியின்போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம். அதைவிட பெரிய அனுபவம் வேறு எதுவும் இல்லை. என் தந்தையைக் கொன்ற நபர் அல்லது சக்தியை காணும்போது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஒரு மகனாக நான் என் தந்தையை இழந்தேன். அது மிகவும் வேதனையானது.

ஆனால் அதே நிகழ்வு, நான் ஒருபோதும் கற்றுக் கொள்ளாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளச் செய்தது. அதில் இருந்து என்னால் விலகிச் செல்ல முடியாது. எனவே நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்வரை மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் அல்லது தீயவர்கள் என்பது முக்கியமல்ல.

 பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தாக்கினால், கடவுளே அவர் மிகவும் கொடூரமானவர். அவர் என்னைத் தாக்குகிறார் என்று பார்ப்பது ஒரு விதம். மற்றொன்று அதை நன்றாகப் பார்ப்பது. நான் அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்பேன்.

வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும், குறிப்பாக பெரிய ஆற்றல்கள் நகரும் இடங்களில் நீங்கள் இருந்தால் எப்போதும் காயப்படுவீர்கள். நான் செய்வதை நீங்கள் செய்தால் நீங்கள் காயமடைவீர்கள். அது சாத்தியமில்லை. ஒரு பெருங்கடல், நீங்கள் கீழே செல்லப் போகிறீர்கள். நீங்கள் கீழே செல்லும்போது அதிலிருந்து எப்படி நடந்துகொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.