மத்திய வங்கி ஆளுநர் பதவியில் தமிழர் ஒருவர் நியமனம்!

0
371

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி விலக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அந்த பதவிக்கு மீண்டும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.