குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு!

0
94

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது  திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 17ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பலர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் சேவையின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இனிமேல் இந்த சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக அல்லது 070 7101 060 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம்.

அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.