ரணிலுக்கு அடித்தது அடுத்த அதிஷ்டம்! சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம்

0
227

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்தீரனத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதுவரையில், 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.