பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் மண்ணெண்ணெய் மீட்பு!

0
233

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்து போயிருந்த நிலையில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் அத்தியாவசிய எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 15 நாட்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் கொண்டு வரப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குடும்ப விநியோக அட்டை அடிப்படையில் அப்பகுதிக்கு வருகை தந்த மக்களுக்கு 900 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெருமளவிலான மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளதுடன், பெற்றோலை சேமித்து வைத்து விற்பனை செய்வதாகவும், இரவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.