முச்சக்கரவண்டியில் சிக்கிய 140 லீற்றர் பெட்ரோல்

0
272

அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோலை கொண்டு சென்ற 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலி-எல பகுதியில் உள்ள வீதி கடவையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படும் நிலையில், அவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.