ஜோ பைடனுக்கு மிக சிறந்த அன்பளிப்பை வழங்கிய பிரதமர் மோடி!

0
84

டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (Joe Biden) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சஞ்சி கலை ஓவிய தொகுப்பை பரிசாக வழங்கினார். 

டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு முன்னர், டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பை பரிசாக வழங்கினார்.

சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை பாரம்பரியமாகும்.

சஞ்சி என்பது காகிதத்தில் கையால் டிசைன்களை வெட்டும் கலை.இந்த ஓவியம் இப்பகுதியின் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ கோவில்களில் அதிகம் காணப்பட்டது.

இந்த சஞ்சி கலை ஓவிய தொகுப்பு, தேசிய விருது பெற்ற கலைஞரால், மதுராவிலிருந்து வரும் தாக்குராணி மலைகளை பற்றிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது.