இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய வீட்டை விட்டு வெளியேறிய மைத்திரி!

0
90

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம், கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு 7 இல் உள்ள அரச இல்லத்தில் குடியேறியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அவர் குறித்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்யசோதி சரவணமுத்து , தாக்கல் செய்திருந்தார்.

மனுவின் விசாரணையின்போது, நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், 2019 ஒக்டோபரில் எடுக்கப்பட்ட அமைச் சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இதனையடுத்து மைத்திரி அந்த வீட்டில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.