குரங்கம்மை குறித்து உலக அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
511

ஆப்பிரிக்காவுக்கு வெளியே பொதுவாக கண்டறியப்படாத நாடுகளில் குரங்கம்மையை கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அம்மை நோய் ஆபிரிக்காவுக்கு வெளியே ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட்ட 14 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எனினும் மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் இந்த வைரஸ் மிகவும் பொதுவானது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த நோயை பரவல் இல்லாத நாடுகளுக்கு பரவுவதை தடுக்கமுடியும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னணி நிபுணர் மரியா வான் கேர்கோவ் தெரிவித்துள்ளார்.