சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றம்!

0
97

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது எனினும் ஆபரண சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக டாலர் மதிப்பு தற்போது வலுவான காராணியாக மாறியுள்ள நிலையில், தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்று குறைந்து காணப்படுகிறது.

சரிவில் உள்ள டாலரின் மதிப்பானது, தங்கத்தினை குறைவான விலைக்கு வாங்க வழிவகுக்கலாம் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது.

குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 4823 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, 38,584 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5260 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 42,080 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எனினும் ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுவதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.