உலகின் அதிக சந்தை பெறுமதிக்கு விற்பனையான ஆடம்பர கார்!

0
484

உலக அளவில் ஆடம்பர கார்கள் உற்பத்தி செய்து முன்னனியில் இருக்கும் ‘மெர்சி டீஸ் பென்ஸ்’ (Mercedes-Benz) கார் நிறுவனம் தனது பழைய ஒட்டப் பந்தைய காரினை உலகின் அதிக சந்தை பெறுமதிக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1955ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இதனை மேற்படி நிறுவனத்தின் அப்போதைய பொறியியலாளர் ருடொல்வ் உகெல்ஹட் 299 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டி சாதனை புரிந்துள்ளது.

பின்னர் இந்த கார் மெர்சி டீஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் சேமிப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்தில் மேற்படி காரினை தனியார் முதலாளி ஒருவர் சுமார் 142 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஆரம்ப காலங்களில் வெளிவந்த திறந்த வடிவமைப்பைக்கொண்ட கார்களில் இவை முதன்நிலையானவை என்பதுடன் காற்று மற்றும் இதர அக தாக்கங்களில் இருந்து பாதுகாக்கப்படவே தற்போது மூடிய வடிவமைப்பைக் கொண்ட கார்களை மேற்படி நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கார் 300 இயந்திர கொள்ளளவு கொண்டது என்பதுடன் உலகில் இதுவரை விற்பனையான கார்களில் அதிக பெறுதிக்கு விற்பனையான கார் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரின் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியானது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதோடு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பகிரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.