கனடாவை தாக்கிய மர்ம புயல்!

0
83

கனடாவில் புயல் காற்று காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களை இந்த புயல் காற்று மோசமாக தாக்கியுள்ளது.

ஒட்டாவா ஆற்றில் படகில் பயணம் செய்து கொண்டிருந்த 51 வயதான பெண் ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஒன்றாரியோவில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் 44 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டாவாவில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த மரணம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. பிரம்டனில் வீதியில் நடந்து சென்ற 70 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வாட்டர்லு பகுதியிலும் மரம் முறிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மின்சார வசதியின்றி இருளில் மூழ்க நேரிட்டுள்ளது.