Monkeypox பரவல் குறித்து விமான நிலையங்களில் கண்காணிப்பு!

0
535

ஐரோப்பிய நாடுகளில் monkeypox தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

உலகில் இதுவரை 14 நாடுகளில் monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் முதன்முறையாக தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. ஹூ அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக்,

இது கோடை காலம் என்பதால் உலகெங்கும் ஆங்காங்கே பெருங்கூட்டங்கள், விழாக்கள், கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதனால் குரங்கம்மை பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.