லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

0
125

இலங்கையில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ள முறைமை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் அமையப்பெற்றுள்ள 416 முகவர் நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்னதாக வருகை தரும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதோடு, இடைத்தரகர்களிடம் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு தேவையான நிதி நாளைய தினம் செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.