புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு ரணில் கொடுத்த அதிர்ச்சி!

0
358

இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு  குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.