“இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை” அலி சப்ரி ஆதங்கம்!

0
73

இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நான் இந்த நாடாளுமன்றத்தை மீண்டும் பார்க்க மாட்டேன், எனக்கு இது தேவையில்லை. இவ்வாறான சூழலைக் காண நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையவில்லை.

இனி ஒருபோதும் இங்கு திரும்பி வரமாட்டேன்,  நான் வாதம் செய்ய வரவில்லை. மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடவே வந்தேன். பொதுப் பணத்தை ஒருபோதும் அபகரிக்கவோ, திருடவோ இல்லை என்றார்.