நாளை இலங்கை வந்தடையும் மனிதாபிமான உதவிகள்!

0
82

இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 9 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் அளவிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்த மனிதாபிமான உதவிகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது