வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

0
75

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய இருந்த நிலையில், அதனை இன்று வரை நீடிப்பதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அனுமதி வழங்கியிருந்தார்.

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.