இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழைக்கு வாய்ப்பு!

0
230

இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லண்டன் இங்கிலாந்தின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும். ஆகவே, மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.

லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பாக இன்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு மக்கள் கடும் வெயிலால் தவித்த நிலையில், இப்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.