யோஷித மனைவியுடன் அவுஸ்திரேலியாவாவை விட்டு தப்பியோட்டம்

0
543

கடந்த மே 09 ஆம் திகதி மகிந்தவின் ஆதரவாளர்களால் அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியான அவரது மகன் யோஷித ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் யோஷித ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்தவர், “யோஷி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை, தனிப்பட்ட விஜயமாக வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கின்றார்.

நாட்டில் நடக்கின்ற விடயங்களுக்கும் அவரது பயணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் தனது வழக்கமான பயணம் ஒன்றையே மேற்கொண்டுள்ளார்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

“என் மனைவி மற்றும் மகனும் அவ்வாறான பயணமே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணத்தில் உள்ளனர். அவர்கள் வேலைக்காக நிறைய பயணம் செய்கிறார்கள், உண்மையில் இப்போது கூட அவர்கள் வேலைக்காக வெளியே இருக்கிறார்கள்.

அரசியல் ரீதியில் மக்கள் அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை, நாங்கள் பொதுமக்களிடமிருந்து விலகிச் செல்ல மாட்டோம். குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திப்போம்” என நாமல் குறிப்பிட்டுள்ளார். 

Gallery

Gallery

Gallery