தோல்வியே சந்திக்காத ஜெர்மன் குத்துச்சண்டை வீரர் மரணம்!

0
208

இதுவரை தோல்வியே சந்திக்காத ஜெர்மன் நாட்டு குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் (Musa Yamak) போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவரான மூசா யாமக் (Musa Yamak) ஐரோப்பா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில், இரண்டாவது சுற்றில் சரமாரியாகத் தாக்கப்பட்ட மூசா யாமக் (Musa Yamak) , மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும் போது நிலைகுலைந்து விழுந்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூசா யாமக் (Musa Yamak) ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.