அமரகீர்த்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

0
401

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி 29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.