கொள்ளுப்பிட்டி வன்முறை சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் பலி

0
182
Dead body in a mortuary

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மையில் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர் மே 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலை மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.