சூடு தணிவதற்குள் கோட்டாவிற்கு எதிராக களத்தில் குதித்த அமைச்சர்கள்!

0
429

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மனதில் சிந்தித்து முடிவு ஒன்றை எடுத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல வேண்டும் என நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்கு தேவை கட்சி அரசியலா அல்லது நெருக்கடிக்கு தீர்வா என்பதே இந்த சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டிய விடயம். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகவில்லை. கட்சி சார்பற்ற போராட்டத்திற்காக சுயாதீனமாக செயற்படுகின்றேன்.

இதனால், எனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தினாலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கோபித்து கொள்ள போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவானது கட்சியினால் எடுக்க முடியாது போன அதேபோல் எடுக்க வேண்டிய முடிவு எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.