நான்கு எரிபொருள் நிலைய உரிமங்கள் ரத்து!

0
336

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரசு விதிமுறைகளை மீறி கையிருப்பில் உள்ள எரிபொருளை கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு விநியோகம் செய்த நிலையிலேயே குறித்த நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.