பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறை! பாரிய வீழ்ச்சி

0
226

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதில் மிகவும் மோசமாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு நேற்று 200 ஆக சரிந்து விட்டது.

இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.’

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இவ்வாறு தொடர்ந்து வீழ்ந்து வருவது அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பல பில்லியன் டாலர் கடன் திட்டத்தை புத்துயிர் பெறுவதற்காக தோஹாவில் உள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதால் உள்ளூர் நாணயம் அதன் சரிவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.