மத்திய வங்கி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு!

0
788

நாடு ஓரளவு அரசியல் ஸ்திரத்தன்மையை பெற்று வருவதால் தான் பதவி விலக விரும்பவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நந்தலால் வீரசிங்க பதிலளித்தார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் என அவர் முன்னர் கூறியிருந்த போதிலும் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பல அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கிய முன்னேற்றம் ஏற்படும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என நான் நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். டாக்டர் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து பலர் தனக்கு போன் செய்து பதவி விலக வேண்டாம் என கூறியதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.