ஊழியர்களுக்கு சம்பளமாக தங்கம் வழங்கும் நிறுவனம்!

0
234

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்கு சம்பளத்தை தங்கமாக வழக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் தினசரி வாழ்க்கை செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் பவுண்டின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் 2022ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என பிரித்தானிய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டனில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் பவுண்டில் தான் நடைபெறுவதால் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் உட்பட சர்வதேச நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான பவுண்டின் மதிப்பு சரியும் போது, பணவீக்கம் அதிகரிப்பது தவிர்க முடியாத ஒன்றாக உள்ளதென பிரித்தானிய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லண்டனில் டேலி மணி என்ற பெயரில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேமரூன் பாரி தங்கள் நிறுவனத்தின், ஊழியர்க்குச் சம்பளத்தைத் தங்கமாக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஒரு ஆண்டாகவே பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. பவுண்டின் மதிப்பு தினமும் சரிந்து வரும் நிலையில், ஊழியர்களுக்குச் சம்பளத்தையும் பவுண்டில் வழங்குவதில் பயனில்லை.

எனவே ஊழியர்களுக்குத் தங்கத்தில் சம்பளமாக வழங்க முடிவு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதறட்டமாக, டேலி மணியில் மூத்த ஊழியர்கள் 20 பேருக்குச் சம்பளமாகத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நிறுவனத்தின் எல்லா ஊழியர்களுக்கும் சம்பளம் தங்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் லண்டனில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் பவுண்டில் தான் நடைபெறும்.

ஊழியர்களை அதை பவுண்டாக மாற்றி செலவு செய்ய வேண்டும். எனவே ஊழியர்கள் தங்களுக்கு பவுண்ட் அல்லது தங்கம் என இரண்டில் எப்படி சம்பளம் வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம் என கேமரூன் கூறியுள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு கிராம் தங்கம் 42.2 பவுண்டாக இருந்தது. இந்த ஆண்டு அதுவே 47.7 பவுண்டாக அதிகரித்துள்ளதுடன் , ட 12.76 சதவீதம் தங்கம் விலை உயர்ந்துள்ளது.