சீனாவின் ரகசிய திட்டம் அம்பலம்!

0
245

இந்திய, சீன பிரச்சனைக்குரிய கிழக்கு லடாக்கில் உள்ள சா்ச்சைக்குாிய பான்காங் ஏாி அருகே இரண்டாவது பாலத்தை சீனா ரகசியமாக கட்டிவருவது செயற்கைக்கோள் புகைப்படம் முலம் அம்பலமாகியுள்ளது.

இந்திய- சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20km தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீனப்படைகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

லடாக்- கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த அதேவேளை சீன படையினருக்கும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

அதன்பின், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பான்காங் ஏாியின் தெற்கு பகுதியை இந்திய ராணுவத்தினா் கைப்பற்றி நிலையில் அந்த பகுதிகளில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த சீனா முயன்று வருகிறது.

அதன்படி லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் கடந்த ஜனவாி மாதம் பாலம் ஒன்றை சீன ராணுவம் கட்டியதற்கு இந்திய தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஒரு புதிய பாலத்தைகட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன ராணுவத்தினா் விரைவாக முன்னேறும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன்,

அசல் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பொிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. இதனை செயற்க்கோள் புகைப்படம் உறுதிப்படுத்தி உள்ளது.

பாலத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருவதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதுடன், செயற்கைக்கோள் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளாா்.