நீண்ட காலமாக கனடா மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சீனா!

0
734
A farmer rakes his hay field surrounded by a canola fields near Cremona, Alta., Monday, July 12, 2021.THE CANADIAN PRESS/Jeff McIntosh

நீண்ட காலமாக கனடா மீது விதிக்கப்பட்டிருந்த தடையை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.

Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மெங் வன்சூ கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கனோலா விதைக்கு சீனா தடை விதித்தது.

மூன்று ஆண்டு கால தடையின் பின்னர் இவ்வாறு சீனா தடையை தளர்த்தியுள்ளது.

கனடாவின் விவசாயத்துறை அமைச்சர் மேரி கிளவுட் (Marie-Claude Bibeau) மற்றும் வர்த்தக அமைச்சர் மற்றும் மேரி நக் (Mary Ng) இந்த தடை நீக்கம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கனோலா விதைகள் ஏற்றுமதி செய்வதற்கு சீனா விதித்திருந்த தடை நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா எல்லா சந்தர்ப்பங்களிலும் சர்வதேச வர்த்தக நியமங்களை பின்பற்றிச் செயற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கனோலா விதைகளைப் பயன்படுத்தி சமையல் எண்ணை தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.