திடீரென பதவியை ராஜினாமா செய்த அல்பர்ட்டா முதல்வர்!

0
180

அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக செயற்பட்டு வந்த கென்னி, கட்சித் தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பில் பின்னடைவை சந்தித்திருந்தார்.

நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜேசன் கென்னி, 51.4 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜேசன் கென்னி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என உள்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்வர் பதவியையும் கென்னி ராஜினாமா செய்தார் என மற்றுமொரு உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் கென்னி தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட வாக்கெடுப்பின் போதும் சில முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்பய்யப்பட்டிருந்ததுடன் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கென்னி பதவி விலகியதாக வேறும் ஊடகங்களில் இதுவரையில் செய்தி வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.