16 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்து திருட்டு: சந்தேக நபர்கள் கைது!

0
210

பின்வத்த கால்துறை பிரிவுக்குபட்ட காலி வீதிக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

திருடப்பட்ட பேருந்து காலி முகத்திடலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் 28 மற்றும் 29 வயதுடைய அலவ்வ மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.