நாளைய தினம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

0
268

  நாளைய தினம் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை இலங்கையில் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  இதன் காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையை நாளை மாலை 4 மணி வரை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நீடித்துள்ளது.

அதற்கமைய, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.