பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பிற்கான அம்சங்கள்!

0
219

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
  • அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.
  • 161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.
  • முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.
  • உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.
  • இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
  • பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
  • பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.