போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய இராணுவ வீரர்கள்!

0
1039

மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறை வடக்கு கிழக்கு தாண்டி கொழும்பு வரை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் கோட்டா கோ கோம் போராட்டக்களத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடித்தனர்.

இன்றையதினம் (18-05-2022) பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்த நிகழ்வில் கோட்டா கோ கம போராட்டத்தில் பங்கெடுத்துள்ள போரினால் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர்.

அதேவேளை இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியும் காலிமுகத்திடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.