புதிய அமைச்சரவை குறித்து கேள்வி எழுப்பிய அநுர!

0
200

முழுமையான அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர்  அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தற்போது நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமருடன் இணைந்து 5 பேர் மாத்திரமே அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் இல்லாததால்,  நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

முழுமையான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் தவறியதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை சீர்குலைக்க முடியாது. இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.