இன்றைய ராசிபலன் } 17.05.2022

0
890

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 17 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் காரியம் அனுகூலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சிவபெருமான் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடகம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ப தால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக் கும். திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் முன்னேற்றம் உண்டாகும். லாபமும் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

துலாம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். மற்றவர்களுடன் வீண்விவாதம் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். பைரவரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற் பகலுக்குமேல் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். ஆனால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடி வதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சில ருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப் பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். பணியாளர் களால் பிரச்னை ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பண உதவி செய்வார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியா பாரம் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் சிவ பெருமான் வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மீனம்

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.