அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0
237

புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கு பொதுச் சேவையில் அனுபவம் வாய்ந்த நேர்மையான அதிகாரிகளை செயலாலர்களாக நியமிப்பதற்குத் தேவையான சுற்றறிக்கையினை வெளியிட வேண்டுமென அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கம்  கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதியிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.  

இதன்படி, நியமிக்கப்படவுள்ள 20 அமைச்சர்களுக்கு தலா 5 செயலாளர்கள் என்ற அடிப்படையில்  100 செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அத்துடன், தற்போது அரச சேவையில்  அல்லது அரை அரச சேவையில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு புதிய சம்பளம் அவசியமில்லை எனவும், அதற்கான சம்பளம் பணிபுரியும் நிறுவனத்தினால் ஈடுசெய்யபடுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 இதனிடையே, புதியஅமைச்சர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான கொடுப்பனவு மாத்திரம் வழங்கப்பட வேண்டுமெனவும், அமைச்சர் கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது எனவும் அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.