நம்பிக்கையில்லாப் பிரேரணை: கோட்டாபய தப்பினார்

0
264

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: மீண்டும் ஆளும்தரப்பு வாக்கெடுப்பில் வெற்றி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகைக்காக நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார்.

இதற்கு சபை முதலவர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோர் வாக்களித்தனர். அந்தவகையில் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் ஆதரவாக 68 வாக்குகளும் பதிவாகின.