மஹிந்த சகாக்கள் 7 பேர் பொலிஸ் விசாரணை வளையத்தில்

0
284

காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாயமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.