2022 ஆண்டின் முதல் சுப்பர் மூன்! கண்டு களித்த மக்கள்

0
577

லத்தீன் அமெரிக்காவில் வானில் நிகழ்ந்த இந்த ஆண்டின் முதல் சுப்பர் மூன் மற்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

அஜெண்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ் மற்றும் கராக்கஸ், வெனிசுலா நாடுகளிலும் இந்த ஆண்டின் சூப்பர் மூன் நன்கு காட்சியளித்தது. குறிப்பாக சிலி நாட்டின் சான்டியாகோ நகர வானில் சிறப்பாக காட்சியளித்தது.

2022 ஆண்டின் முதல் சுப்பர் மூன்! கண்டு களித்த மக்கள்

பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் தோன்றும். அப்போது சந்திரனின் ஒளி, வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படுவதால் முழு நிலவும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். அந்த முழு நிலவு blood moon என்று அழைக்கப்படுகிறது.

அதே போல் முழு நிலவு பூமிக்கு அருகில் வரும் போது அது பெரிதாக தோன்றும். அது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

Gallery