மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்த மஹிந்த ஆதரவாளர்!

0
324

போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இச் சம்பவம் தென் மாகாணத்திலுள்ள நகரமொன்றில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியபோது போராட்டக்காரர்களிடம் சிக்கி நையப்புடைகப்பட்டு பேர வாவியில் குளிக்கும் காட்சியை வீட்டில் உள்ளவர்களும் பிரதேச வாசிகளும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

இதையடுத்து ஊராரும் உறவினர்களும் நண்பர்களும் குறித்த நபரின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர்.

அதேபோல அவரது பிள்ளைகளுக்கும் இதே போல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதன் காரணமாக அக் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.